பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு - முஸ்லிம்களும் விண்ணப்பிக்கலாம் முள்ளிநியூஸ்

பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு - முஸ்லிம்களும் விண்ணப்பிக்கலாம்


சிறிலங்கா காவல்துறை ஆட்சேர்ப்பில் தமிழ்பேசும்விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

காவல்துறை காவலர், பெண் காவலர், சாரதி, உள்ளிட்ட பதவிகளுக்கு 1500 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது.

வரும் ஜூன் 2ஆம் நாள் வரை இந்த ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும்.

ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ளவர்கள், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட காவல்நிலையங்களில் நியமிக்கப்படவுள்ளனர்.

தமிழ் பேசும் விண்ணப்பதாரிகள் வடக்கு, கிழக்கில் உள்ள காவல்நிலையங்களில் விண்ணப்பிக்க முடியும் என்றும் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் சிறிலங்கா காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW