தாய் வெளிநாட்டில்…தந்தை குடியில்….சகோதரர்கள் குடுவில்….அந்த 16 வயதுச் சிறுமியோ…?பாதை தவறிவிட்ட சம்பவம் முள்ளிநியூஸ்

தாய் வெளிநாட்டில்…தந்தை குடியில்….சகோதரர்கள் குடுவில்….அந்த 16 வயதுச் சிறுமியோ…?பாதை தவறிவிட்ட சம்பவம்

sex

களுத்துறைப் பிரதேசத்தில் ஒரே வீட்டில் நான்கு பேருடன் இருந்த சிறுமி ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறுமிக்கு 16 வயது. இவருடன் இருந்த ஏனைய நால்வரும் இளைஞர்கள். 
இந்த ஐவரும் தற்போது பொலிஸ் காவலில் இருப்பதாகத் தெரிகிறது.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளிநாடு சென்றுவிட்டார். தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இரண்டு சகோதரர்களும் போதை வஸ்துக்கு அடிமையானவர்கள் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி பணம் சம்பாதிக்கும் நோக்கிலேயே இவ்வாறு பல இளைஞர்களுடன் இருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW