ஞானசார கொலை மிரட்டல்; தொலைபேசி அழைப்புகள் ‘ஆய்வு’!
இலங்கையில் இனவாதம், வெறுப்பூட்டல் மற்றும் பயங்கரவாதத்தைப் போதித்து தற்போது தலைமறைவாக இருக்கும் பொது பல சேனா பயங்கரவாதி ஞானசாரவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவ்வமைப்பினர் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன் பின்னணியில் ஞானசாரவின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்யும் பணியை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
ஞானசாரவை கைது செய்ய நான்கு விசேட படையணிகள் களமிறக்கப்பட்டு பொலிசாரால் கைது செய்ய முடியாது போயுள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார, விமல் வீரவன்சவின் மனைவி ச ஷி வீரவன்ச போன்றோர் வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த போதிலும் ஞானசார இதுவரை கைது செய்யப்படவில்லை. எனினும், அவரது தொலைபேசிக்கு வந்த அழைப்புகளை பொலிசார் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.