திருகோணமலை பெரிய கடை ஜும்ஆ பள்ளி வாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல். முள்ளிநியூஸ்

திருகோணமலை பெரிய கடை ஜும்ஆ பள்ளி வாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல்.




திருகோணமலை பெரிய கடை ஜும்ஆ பள்ளி வாசல் மீது இன்று அதிகாலை (03) பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

திருகோணமலை மனையாவளி பெரியகடை ஜும்ஆப்பள்ளிவாயல்  இரவு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது..
இப்பள்ளிவாயல் புதிதாக கட்டப்படுவதால் அருகில் இருந்த வளவில் தற்காலிக பள்ளிவாயல் அமைக்கப்பட்டு தொழுகை நடைபெற்று வந்தது.


மூவின மக்களின் ஒற்றுமையை பார்க்க முடியாத சில தீய சக்திகளினால் மக்களை குழப்பும் நோக்கில் இவ்வசம்பாவிதம் நடாத்தப்பட்டுள்ளது.

நாங்கள் தொடர்ந்தும் இன ஒற்றுமையுடன் வாழ்ந்து தீயவர்களுக்கு நமது ஒற்றுமையை காட்ட வேண்டும்
பள்ளி வாசலுக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW