காட்டுக்குள் தேன் எடுக்கச் சென்ற நபரை யானை தாக்கி பரிதாபமாக மரணம்

கெப்பித்திக்கொள்ளாவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஆலங்குளம் பகுதியில் தேன் எடுக்கச்சென்றவரை யானை தாக்கியதினால் நேற்று (10) மாலை ஜந்து பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கெப்பித்திகொள்ளாவ-ஆலங்குளம் பகுதியைச்சேர்ந்த சாவுல் ஹமீட் தௌபீக் (44வயது) எனவும் தெரியவருகின்றது.
குறித்த நபர் தனது உறவினர்களுடன் காட்டுக்கு தேன் எடுப்பதற்காக சென்ற போது குட்டியுடன் நின்ற பெரிய யானை தாக்கியதாகவும் அதனையடுத்து சடலத்தை காட்டிலிருந்து கொண்டு வந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பாக கெப்பித்திகொள்ளாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் அவரது வீட்டில் வைக்கப்ட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.