முஸ்லிம் வார்த்தகர்களை முடக்கும் நடவடிக்கை மூலம் அனைத்து முஸ்லீம்களையும் முடக்க நினைக்கின்றார்களா?

இனவாதம் தலை தூக்கி இருக்கும் இவ்வேலையில் முஸ்லீம்களின் வியாபார நிலையங்கள் எரியூட்டப்படும் சம்பவங்கள் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன இன்று கூட நுகேகொடை விஜயராமபகுதியில் அமைந்துள்ள அக்குரனையைச் சேர்ந்த முஸ்லீம் வர்த்தகரின் லெதர் கடை எரிபட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இரண்டு முறை இந்த பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான லெதர் கடை எரிக்கப்பட்டும் இன்னொரு கடை தாக்கப்பட்டும் இருந்தது.மேலும் இதற்கு முன்னர் நோலிமிட் ,பெசன்பார்க்,லாஸ்ட் சான்ஸ் இன்னும் பல வர்த்தக நிலையங்கள்,எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளது.
ஏன் முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் குறிவைக்கப்படுகின்றன?
அதனால் அவர்கள் எதனை சாதிக்க நினைக்கின்றனர்?
இந்த நிலை ஏன் தொடர்கின்றது?
என்பதை ஆராய வேண்டிய நிலையில் உள்ளோம்.
வர்த்தகத்தில் முஸ்லீம்கள் முன்னோடிகளாக இருந்து வரும் இவ்வேலையில் முஸ்லீம்களின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்ய வேண்டுமானால் பிரபல்யமாக பேசப்படும் வர்த்தக நிலையங்களை எரியச் செய்து அவர்களை மட்டுமல்ல ஏனைய வர்த்தகர்களையும் அச்சமடையச் செய்து வர்த்தக நிலையங்க
ளை மூட வைக்க எடுத்துக் கொண்ட ஆயுதமே இந்தக் கடையெரிப்பாகும்.
உண்மையில் அதில் ஓரளவு அவர்கள் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இன்று அநேகமான முஸ்லீம் வர்த்தகர்கள் பெரும்பான்மைச் சமூகம் வாழும் பகுதிகளிலிருந்து வியாபார நிலையங்களை மூடி வீட்டில் இருக்கின்றனர் பலர் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
இன்னும் பல வர்த்தகர்கள் விரக்தி நிலையில் வியாபாரத்தை தொடர முடியாமலும் முன்னேற்ற முடியாத நிலையிலும் உள்ளனர்.
இவ்வாறான நிலை தொடருமானால் முஸ்லீம்களின் பொருளாதாரம் முடங்கிப் போய் இலங்கையில் வளமற்ற சமூகமாக முஸ்லீம் சமூகம் மாறக்கூடிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
முஸ்லீம் ஏலைகளுக்கு கிடைக்கக் கூடிய ஸக்காத் இல்லாமல் ஆக்கப்படும்,ஸதக்கா குறைந்து விடும்,
அனர்த்ங்களின் போது ஓடோடி வந்து உதவி செய்பவர்கள் குறைந்து விடுவர் ,இவ்வாறு முஸ்லீம்கள் இதனூடாக தாக்கத்திற்குள்ளாக்கும் நடவடிக்கையாகவே இதனை பார்க்க முடிகிறது,அதன் நிகழ்ச்சி நிரலையே இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
இவ்வாறான நிலை மூலம் முஸ்லீம்களைக் குறிவைப்பதாகவே நினைக்கின்றனர்.
மாறாக இதன் பாதிப்பு முழு நாட்டுக்குமேயென்பதை அவர்கள் மறந்துவிட்டனர், இதனூடாக இலங்கையின் பொருளாதாரம் நலிவடைவதோடு முஸ்லீம் நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவிகள் கூட இல்லாமல் செய்யப்படலாம்.
எனவே கடையெரிப்பு நிகழ்வானது கடந்த கால ஆட்சியில் மட்டுமல்ல நல்லாட்சி என்று சொல்லப்படும் இவ்வாட்ச்சியிலும் தொடர்வதானது இன்னும் முஸ்லிம் வர்த்தகர்கள்,முஸ்லீம் மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் நம்பிக்கையின்மை தோற்றுவித்து அவர்களை நிலை குழையச் செய்துள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
இந்த நிலை தொடருமா?
இல்லாமல் செய்யப்படுமா?