நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால் கட்டாருடன் உறவில்லை: எகிப்து! முள்ளிநியூஸ்

நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால் கட்டாருடன் உறவில்லை: எகிப்து!


இஹ்வான்களின் காப்பகமாகவும் பிரச்சாரத் தளமாகவும் இயங்கி வரும் கட்டார், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மைக்கு உருவாக்கியிருக்கும் அச்சுறுத்தலை நீக்குவதற்கான நிபந்தனைகளுக்கு இணங்காவிட்டால் அந்நாட்டுடன் ராஜதந்திர உறவுகளை வைத்துக்கொள்ளப் போவதில்லையென அறிவித்துள்ளது எகிப்து.

தொடர்ந்தும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வரும் குவைத் அமீரை நேற்றைய தினம் அங்கு சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ள எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் சமீ சுக்ரி, இதனை தெளிவுபடுத்தியுள்ளதுடன் ஏனைய நாடுகளின் கவலை குறித்து கட்டார் சிந்திக்கத் தயாரில்லையெனவும் அவ்வாறான நிலையில் அந்நாட்டுடன் உறவாடிவதில் இணக்கப்பாடில்லையெனவும் தெரிவித்துள்ளது.

எகிப்து, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட்ட பல நாடுகள் கட்டாருடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW