டெங்கு: மொரட்டுவ பல்கலை மாணவி மரணம்
டெங்கு பரவலின் பின்னணியில் மொரட்டுவ பல்கலையின் கல்வி நடவடிக்கைகள் இரு வார காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக மாணவர் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
பல்கலை மாணவர்கள் 87 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் இரு வாரங்களுக்கு கல்வி நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே பாதிப்பு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.