தம்புள்ளை விகாரையை பூட்ட வருபவர்கள் குருநாகலையை தாண்டமாட்டார்கள் : சு க தம்புள்ளை அமைப்பாளர் ...
-ஜே எம் ஹபீஸ் -
தம்புல்லை விகாரையை தற்காலிகமாக மூடுவதற்கு மேற்கொள்ளும் சகல நடவடிக்கைகளுக்கும் தமது எதிர்பை தெரிவிப்பதாக தம்புல்லை பௌத்த குருமார் அமைப்பு தெரிவிக்கிறது.
அதேநேரம் தம்புல்லை விகாரைக்கு சேதம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்குமாயின் தான் தம்புல்லை தொகுதி அமைப்பாளத் பதவியையும் தூக்கி வீசத்தயங்க மாட்டேன் என ஸ்ரீல.சு.க. அமைப்பாளர் யூ.ஆர்.தயானந்த தெரிவித்துள்ளார்.
புராதன பெறுமதி மிக்க தம்புல்லை விகாரையை பார்வையிட வரும் வெளிநாட்டவர்களுக்கு விசேட அனுமதிச் சீட்டுக்கள் அச்சிடும் வரை காலதாமதம் ஏற்படும் வகையில் புனரமைப்புப் பணி என்ற அடிப்படையில் விகாரையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சில தரப்பினர் குற்றம் சாட்டுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்படி விகாரையை தற்காலிகமாக மூடுவது தொடர்பாக பௌத்த மத குருமார் அமைப்புக்களும், பொதுமக்கள் பிரதிநிதிகளும் தம்புல்லை விகாரையில் ஊடக சந்திப்பு ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.