மல்லாகம் பகுதியில் கடத்தப்பட்ட மாணவி வரணியில் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி வரணியில் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மாணவி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளரா என்பது தொடர்பில் சட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்லாகத்தில் நேற்று (11) காலை 7.30 இற்கு வேன் ஒன்றில் கடத்தப்பட்ட குறித்த மாணவி சுமார் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் கொடிகாமம் வரணி பகுதியில் மீட்கப்பட்டார்.
வழமையாக தன் சகோதரனுடன் பாடசாலைக்கு செல்லும் இந்த மாணவி நேற்று (11) தனியாக சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.