பேச்சுவார்த்தைக்குத் தயார்; கட்டார் ‘தொனியில்’ மாற்றம்! முள்ளிநியூஸ்

பேச்சுவார்த்தைக்குத் தயார்; கட்டார் ‘தொனியில்’ மாற்றம்!


இங்கே Like செய்யுங்கள் 
ராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் முன் வைத்துள்ள நிபந்தனைகள் நிராகரிக்கப்படும் என்று தெரிந்து கொண்டே முன் வைக்கப்பட்டவையென தெரிவித்துள்ளது கட்டார்.

இந்நிலையில், பேச்சுவார்த்தைகளுக்கு முன்னராக தடைகள் நீக்கப்பட வேண்டும் என்ற நிலையிலிருந்து வந்த கட்டார், தற்போது பேச்சுவார்த்தைக்குத் உகந்த நிலை உருவாக்கப்படுமானால் அதற்கும் தயார் என தெரிவித்துள்ளது.

தற்போது ஐரோப்பிய நாடுகளை சந்தித்து இது தொடர்பில் விளக்கமளித்து வரும் நிலையிலேயே இன்று இத்தாலியில் வைத்து கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

10 நாட்கள் கால அவகாசத்துடன் கட்டாருக்கு விதிக்கப்பட்ட 13 நிபந்தனைகளில் அல்ஜசீரா தொலைக்காட்சி மற்றும் துருக்கி இராணுவ தளம் மூடல் போன்ற விடயங்களும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW