கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலி. #வாகரை போலிஸ் பிரிவில். முள்ளிநியூஸ்

கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஸ்தலத்திலேயே பலி. #வாகரை போலிஸ் பிரிவில்.


மட்டக்களப்பு, வாகரையில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை, புளியம்கந்தலடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதுடைய கந்தையா விக்கினேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில், உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்கதவைத் தட்டும் சத்தம் கேட்மையால், கதவை குறித்த நபர் திறந்தபோது, அவர் மீது ஒருவர் கத்துக்குத்துத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, தாக்குதலில் படுகாயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW