வான்எல பகுதியைச் சேர்ந்த சிறுமி துஷ்பிரயோகம் ; காதலனுக்கு மறியல்

திருகோணமலை, கந்தளாயில் 15 வயதுடைய சிறுமியைக் காதலித்து துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய வான்எல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரை, இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர், சிறுமியைத் தனிமையில் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி விட்டு, வேறொரு பெண்ணுடன் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.