பொலிஸ் ஊழியர் மீது வாள் வெட்டு; மூவர் கைது!
கஹடகஸ்திகிலிய பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை பொலிஸ் அதிகாரி நிறுத்தச் சொன்னதன் பின்னணியில் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த நபர்கள் அங்கிருந்து சென்று ஐந்து பேரை அழைத்து வந்து தாக்குதல் நடாத்தியதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
காயமுற்றவர் அநுராதபுர வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.