உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் எதிர்­வரும் நவம்­பரில் முள்ளிநியூஸ்

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் எதிர்­வரும் நவம்­பரில்



ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை எதிர்­வரும் நவம்பர் மாதத்தில் நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக அரச வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 

பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள புதிய தேர்தல் முறை­யின்கீழ் இந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­மெ­னவும் அவ்­வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. 

எல்லை நிர்­ணய அறிக்­கை­யின்­படி 5092 தேர்தல் தொகு­தி­களில் மக்கள் பிர­தி­நி­திகள் தெரி­வு­செய்­யப்­ப­டு­வ­துடன், மேலும் 30 சத­வீ­த­மான பிர­தி­நி­திகள் விகி­தா­சார அடிப்­ப­டையில் தெரி­வு­செய்­யப்­ப­டுவர். உள்­ளூ­ராட்சி சபை­களில் தற்­போது நான்­கா­யி­ரத்­துக்கும் மேற்­பட்ட பிர­தி­நி­திகள் இருக்­கின்­றனர். புதிய தேர்தல் முறைப்­படி இந்த எண்­ணிக்கை எட்­டா­யி­ர­மாக அதி­க­ரிக்கும். 

இருந்தும் இந்த எண்­ணிக்­கையை 7000 ஆக குறைக்க ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 25 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW