கிண்ணியா நகர சபையில் தீயணைப்பு பிரிவு ஆரம்பிக்க கோரிக்கை -இம்ரான்- MP முள்ளிநியூஸ்

கிண்ணியா நகர சபையில் தீயணைப்பு பிரிவு ஆரம்பிக்க கோரிக்கை -இம்ரான்- MP


வெள்ளிக்கிழமை(14) அன்று நடைபெற்ற கிண்ணியா பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இம்ரானினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேசத்தில் அதிகரித்துவரும் சனத்தொகைக்கு தீயணைக்கும் பிரிவு இங்கு அமைப்பது அத்தியாவசியமானது.

சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப அதிகரித்து வரும் சனத்தொகை நெரிசலாலும் அபிவிருத்தி ,வியாபார நடவடிக்கைகளாலும் தீ விபத்தொன்று ஏற்படும் பட்சத்தில் பாரிய அழிவொன்றை நாம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை நகரசபையில் மட்டுமே தீயணைக்கும் பிரிவொன்று காணப்படுகின்றது மூதூர், தம்பலகாமம் பிரதேச சபைகளாக காணப்படுவதால் அங்கு இப்பிரிவை உருவாக்க முடியாது கிண்ணியாவில் இப்பிரிவை உருவாக்குவதன் மூலம் எங்களால் அருகிலுள்ள மூதூர் தம்பலகாமம் பிரதேசங்களையும் கவனிக்க முடியும் என பாராளமண்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW