தந்தை மகளை வெட்டிக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சபவம் பெரும் பரபரப்பு ...... முள்ளிநியூஸ்

தந்தை மகளை வெட்டிக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சபவம் பெரும் பரபரப்பு ......

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தந்தை ஒருவர் தனது இளம் மகளை வெட்டிக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












17 வயது மகளையே (29) திகதி பகல் வீட்டில் வைத்து தந்தை வெட்டிக் கொலை செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

மகளின் காதல் விவகாரத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த அவர், சனிக்கிழமையன்று மகளைக் கொலை செய்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இலங்கையில் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை! 

அதிர்ச்சி தகவல்:- 

கொலையைப் புரிந்த தந்தை, வீட்டுக்கு அருகிலுள்ள காணிக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் மேலும் தெரிவந்துள்ளது. 

மேலும், 49 வயதான குறித்த குடும்பஸ்தர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்றும், அவர் முன்னாள் இராணுவச் சிப்பாய் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

மகளின் காதலன் இராணுவத்தில் கடமையாற்றுகின்றார் என்றும் கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW