FB Love 15 வயது மாணவி பாலியல் பாதிப்பு முள்ளிநியூஸ்

FB Love 15 வயது மாணவி பாலியல் பாதிப்பு

பேஸ்புக் மூலம் காதல் கொண்ட 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவமொன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.



சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் சந்​தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாத்தறையைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த இளைஞர் பேஸ்புக் ஊடாக சிறுமியுடன் தொடர்பைப் பேணியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை சந்தித்த குறித்த இளைஞன் அவர் தங்கியிருந்த வீட்டுக்கு ​அழைத்து சென்று பல நாட்கள் தங்கவைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இந்நிலையில் தனது மகள் ​இனந்தெரியாத இளைஞனுடன் வீடொன்றில் தங்கியிருப்பதாக சிறுமியின் தாயாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் தாய் திவுலப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமி வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்ததையடுத்து சிறுமி தாயின் பாதுகாப்பில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்   

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW