களுத்துறையில் 15 வயதினருக்கான பாலியல் கல்வியை வழங்குவதற்கு ஆலோசனை
ஜூன் மாதம் முதல் களுத்துறையில் பதின்ம வயதினருக்கான பாலியல் கல்வியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் களுத்துறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி கூறுகையில்,
15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பதின்ம வயதினருக்கான பாலின கல்வியை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
களுத்துறையில் இளைஞர்களுக்கான பாலியல் கல்வியை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர் ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் படி, 15 மற்றும் 18 வயதுடைய பதின்ம வயதினருக்கான பாலியல் கல்வியை ஜூன் மாதம் முதல் ஆரம்பிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கையின் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு பால்வினை நோய்கள் காணப்படுவதாக கடந்த வருடம் தேசிய STD/AIDS கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு பதிவான 18-30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே தொற்றுநோய்களில் அதிகரிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
