துப்பாக்கிச்சூடு : சிகிச்சை பலனின்றி 17 வயது இளம்பெண் உயிரிழந்தார்- 6 பேர் படுகாயம்...
விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! 17 வயது இளம்பெண் உயிரிழப்பு.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த எந்தத் தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.
அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது இளம்பெண் கொல்லப்பட்டார்.
வடக்கு கலிபோர்னியாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு வந்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு சென்றனர்.
அப்போது 6 பேர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 17 வயது இளம்பெண் உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த எந்தத் தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை.
துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னர் அதே முகவரிக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டதாகவும், துப்பாக்கியை காட்டி சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
