திருகோணமலை,உப்புவெளியில் 17 வயது இளைஞன் தற்கொலை..... முள்ளிநியூஸ்

திருகோணமலை,உப்புவெளியில் 17 வயது இளைஞன் தற்கொலை.....

திருகோணமலை,உப்புவெளியில் 17 வயது இளைஞன் தற்கொலை....

திருகோணமலையில் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்த 17 வயது இளைஞன்! திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு (07) இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 17 வயதான வசந்தராஜா நிலுஜன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக உப்புவெளி காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

குறித்த இடத்திற்கு இன்று (08) வருகைதந்த திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக உத்தரவிட்டுள்ளார். ச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW