விவசாயிகளுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சியான தகவல்.....
01 ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டுக்கான பருவத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா உள்ளிட்ட உரங்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (03) விவசாய அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
மேலும், உரம் கொள்வனவு செய்வதற்கு 01 ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் உரம் கொள்வனவு செய்வதற்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை தீர்மானித்தவாறு அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, இந்த பருவத்தில் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதை விவசாயிகளின் விருப்பத்திற்கேற்ப மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
