கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து - 23பேர் படுகாயம்....
காயமடைந்த பல பயணிகள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கஜுகம, பஸ்யால பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பொதுமக்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
காயமடைந்த பல பயணிகள் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
