988 - கைதிகளுக்கு பொது மன்னிப்பு :6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிப்பு......
இன்றும் நாளையும் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சிறைக்ககைதிகளில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேநேரம் விசாக பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலை கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு விசேட அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றும் நாளையும் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கு மாத்திரம் தேவையான உணவு மற்றும் இனிப்புக்களை வீட்டில் இருந்து எடுத்துச் செல்லுமாறு உறவினர்களிடத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
