30 வயதான திருநங்கை கல்லால் அடித்து கொலை! அதிர்ச்சி சம்பவம்
காவல்துறையினர் கொலை செய்த திருநங்கையை தேடி வருகின்றனர்.
இந்தியாவில் திருநங்கை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவண்டி காய்பி நகர் பகுதியில் 2 திருநங்கைகள் வசித்து வந்தனர்.
இருவரும் சிறிய பிரச்சினைகளுக்கு கூட அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் 1.30 மணியளவில் வழக்கம் போல திருநங்கைகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்து அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் விலக்கிவிட முயன்றனர்.
ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை.
இந்தநிலையில் ஒரு திருநங்கை, 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு திருநங்கையை கல்லால் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த திருநங்கையை தேடி வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
