பரிதாப உயிரிழப்பு 24வயது யுவதி..! முள்ளிநியூஸ்

பரிதாப உயிரிழப்பு 24வயது யுவதி..!



யாழ்ப்பாண பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த சம்பவம் சுழிபுரம் - கல்விளான் பகுதியில் (18-05-2023) இடம்பெற்றுள்ளது.

 இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுழிபுரம் - கல்விளான் பகுதியைச் சேர்ந்த 24 வயதான இராசதுரை நிரோஜா என்ற பெண்ணே அவரது வீட்டிலிருந்து 300 மீற்றர்கள் தொலைவில் உள்ள கிணறு ஒன்றில் விழுந்துள்ளார்

 இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை கிணற்றிலிருந்து தூக்கி சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW