கைவிடப்பட்ட பாழடைந்த வீட்டில் தங்கியிருந்த நபர் கோடாரியால் தாக்கி கொலை:2பேர் கைது
அனுராதபுரம் முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட பாழடைந்த வீட்டில் தங்கியிருந்த 32 வயதான நபர் இனந்தெரியாத சிலரால் கோடாரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹூரிகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் இன்று நடந்துள்ளது. முதுன்கொட பிரதேசத்தில் வசித்து வந்த நிலம்புவாகே துசித குமார என்ற 32 வயதான நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஹூரிகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
