பொலிஸ் அதிகாரியின் கீழ் இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு : 6 யுவதிகள் கைது
சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது, ஐஸ் மற்றும் கஞ்சாவை கண்டெடுத்துள்ளதாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்கும் அறைகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி, ஓய்வுபெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து நான்கு ஆண்களுடன் விபசாரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஆறு யுவதிகளையும் கைது செய்ததாக குருணாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருணாகல், கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த விபசார விடுதி நடத்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது, ஐஸ் மற்றும் கஞ்சாவை கண்டெடுத்துள்ளதாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபசாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்தப் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சம்பம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
