பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக சென்ற 63 பேர் கைது
பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த 63 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த வாரம் முழுவதும் படகுகளில் அவர்கள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மேலும், கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் centre régional opérationnel de surveillance et de sauvetage (Cross) மற்றும் Gris-Nez ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்தே, கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணயிகள் சென்ற படகுகளில் ஒன்று அதன் இயந்திரத்தை கடலில் தொலைத்துவிட்டு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்த நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சில மீன் பிடி படகுகளையும் அகதிகளை ஏற்றிச் சென்ற நிலையில் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மொத்தமாக 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
