படம் பார்த்து : மனைவியை வற்புறுத்திய கணவன்!-விளக்கமறியலில்.... முள்ளிநியூஸ்

படம் பார்த்து : மனைவியை வற்புறுத்திய கணவன்!-விளக்கமறியலில்....



சந்தேக நபரின் மன நல மருத்துவ அறிக்கை ஒன்றினை பெற்று மன்றில் சமர்ப்பிக்க சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆபாச படங்களை காட்டி, அப்படங்களில் உள்ளவர்களைப் போன்று தன்னுடன் நடந்துகொள்ளுமாறு இயற்கைக்கு மாற்றமாக பால் உறவில் ஈடுபட வற்புறுத்தி தன் மனைவியை தாக்கிய கணவனை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ், சந்தேக நபரின் மன நல மருத்துவ அறிக்கை ஒன்றினை பெற்று மன்றில் சமர்ப்பிக்க சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தான் இரு பெண் பிள்ளைகளின் தாயார் என வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பெண் குறிப்பிட்டுள்ள நிலையில், அண்மைய நாட்களாக தனது கணவன் மலசல கூடத்தில் அதிக நேரம் செலவழிப்பதாகவும், அவரின் நடத்தையில் அசாதாரணமான மாற்றங்களை அவதானிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சில நாட்களில், தன்னை ஆபாச திரைப் படங்களை பார்க்க கணவன் வற்புறுத்தி, அதில் உள்ளதைப் போன்று இயற்கைக்கு முரணான பாலியல் உறவில் ஈடுபடக் கூறி தாக்கியதாகவும், இறுதியாக இரு தினங்களுக்கு முன்னர் மூன்றாம் நபர் ஒருவரை அழைத்து வந்து, ஆபாச திரைப்படங்களில் உள்ளதைப் போன்று அவருடன் உறவில் ஈடுபட கணவன் வற்புறுத்தியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டி பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

இதன்போது சந்தேக நபருக்காக ஆஜரான சட்டத்தரணி, சந்தேக நபர் அதிக ஐஸ் போதைப் பொருள் பாவனை மற்றும் ஆபாச படங்களை பார்வை இட்டதன் ஊடாக மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் விளைவே இந்த சம்பவம் என குறிப்பிட்டார்.

இந்நிலையிலேயே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், சந்தேக நபரின் மன நல மருத்துவ அறிக்கை பெற உத்தரவிட்டார். 


 BY: M.F.M.Fazeer
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW