எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் பல சந்தேகங்கள் - சஜித் பிரேமதாச முள்ளிநியூஸ்

எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவம் தொடர்பில் பல சந்தேகங்கள் - சஜித் பிரேமதாச



உலகில் உயர்தர துறைமுகம் நம்மிடம் இருந்தும், இந்த விபத்தின் போது அதனை தடுப்பதற்கு தேவையான உபகரணங்களை நம்மிடம் இருக்கவில்லை கடந்த 2021ஆம் ஆண்டு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளாகி சில மாதங்களுக்கு பின்னர் கடல் சூழலை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இந்த நிகழ்வுகளை பார்க்கும் போது சதி நடந்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் நமது கடல் சுற்றுச்சூழலில் அதிக அளவில் இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும், மீனவர்களுக்கும் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது, உலக நாடுகள் பசுமைப் பொருளாதாரம், நீலப் பொருளாதாரம் எனப் பேசினாலும் அது எமது நாட்டில் வெறும் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சுப் பகிர்வின் மூலம் அது தெளிவாகத் தெரிகிறது எனவும் அவர் தெரிவித்தார்

. அப்போது ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்தது போன்று தற்போதைய ஜனாதிபதியும் எவ்வித மாற்றமும் இன்றி செயற்படுவார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நியூ டையமண்ட் (New Diamond ) சம்பவத்தின் பின்னர் அரசாங்கம் எதிர்காலத்திற்காக எடுத்த தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

 மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் எவருடைய குணாதிசயங்களையும் படுகொலை செய்ய வேண்டிய அவசியமில்லையென்றாலும், மீண்டும் அவ்வாறானதொன்றிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் தெளிவான நோக்கம் தனக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தத்தில் இருந்தும் நியூ டையமண்ட் அனர்த்தத்திலிருந்தும் இந்த அரசாங்கம் பாடம் கற்கவில்லை எனவும், இந்த ஒழுங்கற்ற பயணத்தினால் நாடு பாரிய இழப்பை சந்தித்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். 

 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கசிவு இருப்பதாக முதலில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதை இந்த நாட்டின் கடல்சார் அமைப்பில் நுழைய அனுமதித்தது யார் என்பது வெளிவர வேண்டும், உலகில் உயர்தர துறைமுகம் நம்மிடம் இருந்தும், இந்த விபத்தின் போது அதனை தடுப்பதற்கு தேவையான உபகரணங்களை நம்மிடம் இருக்கவில்லை. இந்த அரசாங்கம் கப்பலை காப்பாற்ற முயற்சித்தாலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவில்லை என அவர் தெரிவித்தார். 

 மேலும், இந்த விவாதத்தை நிறுத்துவதற்கு பாரிய சதி இடம்பெற்றுள்ளதாகவும், தாம் கப்பல் போக்குவரத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் நாட்டு மக்களையும் சுற்றுச்சூழலையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW