அமெரிக்காவில்- டெக்சாஸ் வணிக வளாகத்தில் எட்டுப் பேர் சுட்டுக்கொலை! முள்ளிநியூஸ்

அமெரிக்காவில்- டெக்சாஸ் வணிக வளாகத்தில் எட்டுப் பேர் சுட்டுக்கொலை!



அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிதாரி ஒருவரால் எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தையடுத்து, வணிக வளாகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.துப்பாக்கிதாரியையும் சுட்டுக் கொன்ற காவல்துறையினர் தெரிவித்தனர். 

பலியானவர்களில் சிலர் சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த குறைந்தது ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW