காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கா.பொ.த சாதாரண தர மாணவர்கள்..!
ஹெம்மாவடகம பணிய நீர் திட்டத்திற்கு சொந்தமான அரநாயக்க அசுபினியெல்ல நீர் திட்டத்தின் நீர் குழாய்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் 6 பாடசாலை மாணவர்கள் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக அரநாயக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 4 விசேட காவல்துறை குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் இவர்கள், பாடசாலை முடிந்ததும் நீர் திட்டத்திற்கு அருகில் உள்ள காணிக்கு சென்று புகைபிடித்துள்ளதாகவும்,
அங்கு அவர்களால் வீசப்பட்ட தீ குச்சியினால் தீ விபத்து ஏற்பட்டதாகவும் காவல்துறையினரின் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த 6 மாணவர்களில் 5 மாணவர்கள் நாளை பொதுப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் மற்றைய மாணவர் அடுத்த வருடம் பொதுப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
