முன்னால் காதலனால் சுடப்பட்ட பெண் - வவுனியாவில் பரபரப்பு...
வவுனியா பிரதேசத்தில் தானும் சுட்டு ஒரு பிள்ளையின் தாயையும் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தெரிவித்துள்ளதாவது,
பறயனாலங்குளம் நிலியமோட்டை பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு சுட்டுக்ககொல்லப்பட்டடுள்ளார். மேலும், 24 வயதுடைய நபரே தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலையும் செய்து கொண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட பெண்,திருமணத்திற்கு முன்னர் குறித்த சந்தேக நபருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணைகளழல் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்பொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
