வகுப்புக்குச் செல்வதாகக் கூறி விட்டு : சென்ற இரண்டு மாணவர்களுக்கு நேர்ந்த கதி
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரையில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்றைய தினம் (06.05.2023) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்குச் செல்வதாகக் கூறி சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த 16 வயதான டானியல் றோகித் மற்றும் இருதயபுரத்தினை சேர்ந்த 16 வயதான நிரோசன் பிரவீன் ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் (06.05.2023) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்குச் செல்வதாகக் கூறி விட்டு கடற்பகுதியில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குப் பிரேதப் பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
