அரசு ஊழியர்கள் பற்றிய முக்கிய தீர்மானம்
அரச ஊழியர்களுக்கான தேர்தல் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அவதானிப்புகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புரவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர நேற்று (02) விடுத்துள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் மாகாண ஆளுநர்கள் ஊடாக அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்..
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
