வேன்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து முள்ளிநியூஸ்

வேன்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

வேன்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து


மின்னேரிய - ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய புகையிரத நிலைய சந்தியில் ஒரே திசையில் பயணித்த இரண்டு வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

நேற்று (29) இடம்பெற்ற விபத்தில் 12 பேர் காயமடைந்து பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் ஹிகுராக்கொட பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த வேன் ஒன்றும், அனுராதபுரத்திலிருந்து சோமாவதியை நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW