அமெரிக்காவே அதிர்ந்து போன விசயம் பற்றி, வண்டி வண்டியாய் வாந்தி எடுத்திருக்க வேண்டிய ஊடகங்கள் மௌனம்
ஆம். அமெரிக்க அதிபர் ஜோ பைடனைக் கொல்வதற்காகக் கடந்த ஆறு மாதங்களாக சதித் திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சதித் திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக வெள்ளை மாளிகைச் சுவரில் லாரியைக் கொண்டுபோய்க் கடும் வேகத்தில் மோத வைத்துள்ளான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் எனும் இளைஞன்.
அமெரிக்க அதிபரையே கொல்ல முயன்ற இந்தக் கயவனை “இந்து பயங்கரவாதி” என்றோ “இந்திய பயங்கரவாதி” என்றோ எந்த ஊடகமும் சொல்லவில்லை, எழுதவில்லை.
ஒரு வினாடி யோசித்துப் பாருங்கள்.
“சாய் வர்ஷித்” எனும் பெயர் “ஷம்சுதீன்” என்று இருந்திருந்தால் இந்நேரம் இந்தச் செய்தி ஊடகங்களில் எப்படி வெளியாகி இருந்திருக்கும்?
மேலை நாட்டு ஊடகங்கள் அனைத்தும் “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று வண்டி வண்டியாய் வாந்தி எடுத்திருக்கும்.
அந்த நாற்ற வாந்தியைக் கூச்ச நாச்சமே இல்லாமல் அப்படியே இந்திய ஊடகங்கள் எதிரொலித்திருக்கும்.
ஆனால் இப்போது எல்லாமே கப்சிப்.
காரணம்-
“சாய் வர்ஷித்” எனும் பெயர்தான்.
-சிராஜுல்ஹஸன்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
