விடுதி உரிமையாளரின் மனைவி கைது : திடுக்கிடும் தகவல்....
களுத்துறையில் 05 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது மாணவி டிஹாரா தர்மினியின் மரணம் தொடர்பிலான விசாரணையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண், குறித்த விடுதி உரிமையாளரின் மனைவி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் குறித்த பெண் அன்றைய தினம் குறித்த விடுதியில் பணிபுரிந்து வந்ததாகவும், மற்றுமொரு மாணவியின் அடையாள அட்டையைப் பெற்று இறந்த பாடசாலை மாணவியை விடுதியில் அனுமதித்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தேசிய அடையாள அட்டையை உரிய முறையில் சரிபார்க்காமல் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த இடங்களை வழங்கிய குற்றத்திற்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று பிற்பகல் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
