உலகின் மிகவும் மோசமான நாடுகளின் பட்டியலில் இடம்பெற்ற இலங்கை
உலகில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள 15 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ள சமீபத்திய பட்டியல் காலாவதியான தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
157 நாடுகளை உள்ளடக்கிய வகையில், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் Steve H. Hanke வௌியிட்ட வருடாந்த அறிக்கையில், இலங்கைக்கு 11 வது இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பட்டியல் காலாவதியான தரவுகளை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வேலையின்மை, பணவீக்கம், வங்கி-கடன் விகிதங்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீத மாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட ஒரு சமன்பாட்டைப் பயன்படுத்தி இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன.
தரவரிசைப்படுத்தப்பட்ட நாடுகளில், ஜிம்பாப்வே, வெனிசுலா, சிரியா, லெபனான், சூடான், அர்ஜென்டினா, ஏமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டோங்கா மற்றும் கானா ஆகியவை உலகின் முதல் 15 மோசமான நாடுகளாக முன்னணியில் உள்ளன.
இதற்கிடையில், அமெரிக்கா 134 வது இடத்தில் உள்ளது. சுவிட்சர்லாந்து இந்த பட்டியலில் 157 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
