நாளை பரீட்சைக்குப் போகும் ஆயுள் தண்டனைக் கைதி முள்ளிநியூஸ்

நாளை பரீட்சைக்குப் போகும் ஆயுள் தண்டனைக் கைதி

நாளை பரீட்சைக்குப் போகும் ஆயுள் தண்டனைக் கைதி


நாளை நடைபெற உள்ள கல்வி பொதுத் தரா தர சாதாரணத் தரப் பரீட்சைக்கு சிறைச்சாலைகளில் இருந்து 10 கைதிகள் தோற்ற உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

வட்டரக்க சிறைச்சாலையின் 5 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையின் 5 கைதிகளுமே நாளை பரீட்சைக்கு தோற்ற உள்ளனர். 

வெலிக்கடை சிறைச்சாலையின் ஆயுள் தண்டனைக் கைதியொருவரும் நாளை பரீட்சைக்கு தோற்ற உள்ளார். இதேவேளை, சிறைச்சாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார். 

மேலும் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

மேலும், பரீட்சை நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒலிபெருக்கிகள் மற்றும் பரீட்சைகளுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு நடத்தையையும் மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW