போதைப் பொருட்களை ஏற்றிய பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது முள்ளிநியூஸ்

போதைப் பொருட்களை ஏற்றிய பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது



இலங்கைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடற்படை கப்பலான விஜயபாஹூவின் விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருமளவு போதைப்பொருட்களை ஏற்றிய பல நாள் மீன்பிடி கப்பலுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் இன்று கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW