பாடசாலைகளுக்கு அருகில் மாணவர்களை கடத்திச் செல்லும் குழு தொடர்பில் எச்சரிக்கை
பாடசாலைகளுக்கு அருகாமையில் மற்றும் பாடசாலைகளை அண்மித்த வீதிகளில் மாணவர்களை கடத்திச் செல்லும் குழுவொன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக அக்மீமன பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் உடனடியாக மாணவர்கள் மற்றும், தெரிந்த அதிபர்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, நேற்று (16) கொட்டாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு அருகில் குழந்தை ஒன்றை கடத்த எடுத்த முயற்சி தவறியுள்ளதாகவும் அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
