ஆளுநர்கள் நியமனத்தில் பசில் ராஜபக்சவின் பங்கு முள்ளிநியூஸ்

ஆளுநர்கள் நியமனத்தில் பசில் ராஜபக்சவின் பங்கு



மூன்று மாகாணங்களுக்கு நியமிக்க வேண்டிய ஆளுநர்களின் பெயர்களை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பரிந்துரைத்திருந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பசில் ராஜபக்ச கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்து ஆளுநர்களை நியமிப்பது குறித்து கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. 

இதன் போது லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோரின் பெயர்களை பசில் ராஜபக்சவே ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக அந்த இணையத்தளம் கூறியுள்ளது. 

இதனிடையே கடந்த வாரம் துபாய் புறப்பட்டு சென்ற பசில் ராஜபக்ச நாளை மறுதினம் நாடு திரும்பவுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW