குவைத்நாட்டில் இருந்து நாடுக்கடத்தப்பட்ட 32 இலங்கைப் பெண்கள்
குவைத் நாட்டின் சட்டங்களை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த 32 பெண்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த 32 பெண்களும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி குவைத் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பணிபுரியும்போது, தூதரகத்திற்கு வந்து தாங்களாகவே இலங்கை செல்வதற்காகப் பதிவு செய்த இலங்கைப் பெண்களின் குழுவே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வாறு, இலங்கைக்கு அனுப்பப்பட்ட பெண்கள் அனுராதபுரம், வவுனியா, கம்பஹா, கிண்ணியா, கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள், பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருடன் கலந்துரையாடி, தலையிட்டு தற்காலிக விமான அனுமதியின் கீழ், இவர்களை இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ததாக குறிப்பிடப்பிட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
