பட்டினி சாவை எதிர் நோக்கி இருந்த சிறார்களை மீட்ட பொலிஸார்... முள்ளிநியூஸ்

பட்டினி சாவை எதிர் நோக்கி இருந்த சிறார்களை மீட்ட பொலிஸார்...



சாப்பிட உணவு ஏதுவும் இன்றியும் நடக்க முடியாமலும் மிகவும் பாதுகாப்பற்ற நிலைமையில் இருந்து மூன்று சிறார்களை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டதாக மினுவங்கொடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் தெரிவித்துள்ளது. 

12 வயதான விசேட தேவையுள்ள சிறுமி, அவரது 7 மற்றும் 8 வயதான சகோதர்களை அவர்களின் பாதுகாப்பு கருதி தாம் பொறுப்பேற்றதாக பணியகம் கூறியுள்ளது.

இந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மரணமடைந்து விட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

மினுவங்கொடை உண்ணாருவ பிரதேசத்தில் வீடொன்றில் இந்த பிள்ளைகளுடன் சிகிச்சையின்றி தரையில் படுத்து கிடந்த தாயை வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆண் பிள்ளைகள் சில காலங்களுக்கு முன்னர் பாடசாலை சென்றுள்ளனர்.தற்போது காணப்படும் வறுமை காரணமாக பாடசாலைக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர். 

மினுவங்கொடை பிரதேச செயலாளர் அலுவலகத்தின் சிறுவர் உரிமைகள் தொடர்பான அதிகாரி,பொலிஸாரு்ககு இது சம்பந்தமாக தெரியப்படுத்தியுள்ளார். 

இதனையடுத்து அங்கு சென்ற சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் பிள்ளைகளை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டு பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

பாதுகாப்பற்ற நிலைமையில் இருக்கும் இந்த சிறார்களை மினுவங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி பொருத்தமான காப்பாளரிடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW