பெண் குளிப்பதை இரகசிய வீடியோ எடுத்த நபர்... முள்ளிநியூஸ்

பெண் குளிப்பதை இரகசிய வீடியோ எடுத்த நபர்...



ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் குளிப்பதை இரகசியமான முறையில் வீடியோ பதிவு செய்த சந்தேக நபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவங்கொடை பதில் நீதவான் அத்துல குணசேகர உத்தரவிட்டுள்ளார். 

கட்டுநாயக்க பிரதேசத்தில் வாடகைக்கு அமர்த்திய அறையில் தங்கியிருந்த மீகலேவ, பண்டாரகம பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

ஆடைத் தொழிற்சாலையின் ஊழியரான சந்தேக நபரை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மனநல மருத்துவரிடம் காண்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கட்டுநாயக்க பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரியும் முறைப்பாட்டாளரான பெண், குளிக்கும் போது, அந்த இடத்தை மறைத்துள்ள சுவரில் இருக்கும் ஓட்டை வழியாக சந்தேக நபர், பெண் குளிப்பதை வீடியோ பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது. வீடியோ காட்சி அடங்கிய செல்போன் வழக்கு தடய பொருளாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில் மற்றுமொரு பெண் குளிக்கும் காட்சியும் இருப்பது இதன் பின்னர் தெரியவந்துள்ளது. சந்தேக நபரும், முறைப்பாட்டாளரான பெண்ணும் கட்டுநாயக்க வெலம்பட வீதியில் வீடொன்றில் இரண்டு அறைகளில் வாடகைக்கு தங்கியிருந்துள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW