வீடொன்றுக்குள் புகுந்த இளைஞன் ஒருவரை வெட்டிக்கொலை
மூன்று நபர்கள் பொரல்லை சிறிசர தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த நபரை கூரிய ஆயுதங்களினால் வெட்டிக்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரி.ஆர்.பிரதீப் குமார என்ற 28 வயதான இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொரல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட தகராறை அடிப்படையாக கொண்டு மூன்று நபர்கள் நேற்று வீட்டுக்குள் புகுந்து இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பொரல்லை பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
