கண்ணிவெடி அகற்றிக்கொண்டிருந்த யுவதியை இரு இளைஞர்களால் வன்புணர்வு முள்ளிநியூஸ்

கண்ணிவெடி அகற்றிக்கொண்டிருந்த யுவதியை இரு இளைஞர்களால் வன்புணர்வு



முல்லைத்தீவு - வெலிஓயா பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த குழுவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள், தம்முடன் பணியாற்றி யுவதி ஒருவரை பலவந்தமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு இளைஞர்கள் குறித்த பெண்ணை தங்களுடைய தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அந்த சம்பவத்தால் பயந்து ஓடிச்சென்ற வேளையில் அவர் ஓரிடத்தில் தவறி விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, மற்றொரு குழுவினர் அவரை முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த இரண்டு இளைஞர்களுடன் அவர் சண்டையிட்டதாகவும், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கண்ணிவெடி அகற்றும் அமைப்பிடம் தகவல் கேட்டபோது, அவர்கள் இது தொடர்பாக தமக்கு முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களான இரு இளைஞர்களும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்வதற்காக முல்லைத்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW