கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர - ஒருவர் பலி
குருநாகல் கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு குருநாகல் வீதியில் தியகம்பள பிரதேசத்தில் இருந்து கொட்டதெனியாவ பிரதேசத்தை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி புரண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த கொட்டதெனியாவ பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான நபர் தம்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
